பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் மீள திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகும் என அவர் குறிப்பிட்டார்.