பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது எப்போது – ஜனாதிபதி தலைமையில் நாளை முக்கிய கலந்துரையாடல்!

0

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து நாளை(புதன்கிழமை) விசேட கலந்துரையாடல் இடம்பறவுள்ளது.

அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பது அல்லது மாற்று திகதிகள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக இதன்போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.