பாடசாலைகள் எப்போது ஆரம்பமாகின்றன – முக்கிய தகவல் வெளியானது!

0

ஒரு மாதகாலத்தின் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படலாம் என கல்வியமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலைகளை ஆரம்பிப்பது நான்கு கட்டங்களாக இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களிற்கு அமையவே பாடசாலைகள் மீள திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மாத்தறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள கல்வியமைச்சர்,

சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டே அன்றே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதி குறித்த அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

திகதி அறிவிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் தொற்றுநீக்கல் செயற்பாடுகள் இடம்பெறும் என தெரிவித்துள்ள கல்வியமைச்சர் அதற்கு நான்கு நாட்களிற்கு பின்னரே பாடசாலைகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.

முதலில் சாதாரணதர உயர்தர வகுப்பு மாணவர்களிற்கான வகுப்புகளே ஆரம்பமாகும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.