பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? கல்வி அமைச்சரின் அறிவிப்பு

0

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் நேற்றைய தினம் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

என்ற போதும் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.