பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? – கல்வி அமைச்சரின் அறிவிப்பு வெளியானது

0

செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறக்கும் சாத்தியம் இல்லை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது வேகம் எடுத்து வரும் கோவிட் பரவல் அச்ச நிலையை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.