பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன

0

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், 105 நாட்களுக்கு பின்னர் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்படுகின்றது.

பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் தீர்மானித்து அறிவித்திருந்தனர்.

அதற்கமையவே நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்படுகின்ற போதிலும் மாணவர்கள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அந்தவகையில் நாளைய தினம் அதிபர், ஆசிரியர் மற்றும் ஏனைய சேவையாளர்கள் ஆகியோரே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

இவர்கள் ஊடாகவே எதிர்வரும் ஒருவாரக் காலப்பகுதிக்குள் பாடசாலைகளை தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.