பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது எப்போது? முக்கிய தகவல் வெளியானது!

0

கொழும்பில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக மே 11 அன்று பல்கலைக்கழகங்களையும் பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது.

இது குருத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான எந்தவொரு முடிவும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரில் மட்டுமே எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன் பின்னர் இது பற்றி தீர்மானிப்பதற்கான அதிகாரம் துணைவேந்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அந்தந்த பல்கலைக்கழகங்களின் கல்வி ஊழியர்களுக்கான பணிகளை மீண்டும் தொடங்க முடிவு செய்திருந்தோம் இருப்பினும் முடிந்தவரை ஒன்லைனில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.