பாடசாலைகள் மற்றும் பல்கலை மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படும்

0

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்படும் என அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.

முன்னதாக மே 11 ஆம் திகதி இரண்டாம் தவணை நடவடிக்கைக்காக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்தது. இருப்பினும் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக இரண்டாவது தவணை ஏப்ரல் 20 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைக்காக நாட்டில் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்பு சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இதேவேளை அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களுக்காக மே 4 ஆம் திகதியும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மே 11 ஆம் திகதியும் மற்ற அனைத்து மாணவர்களுக்கும் மே 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னர் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.