பாடசாலைகள் ஜீலை 6 ஆம் திகதி ஆரம்பமாகியதன் பின்னர் வரும் வார இறுதியில், உயர் தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று மாலை கல்வி அமைச்சின் செயலாளர் திரு என்.எம்.சித்தரானந்த விடுத்த அறிக்கையிலேயே இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.
உயர் தரப் பரீட்சையை செப்டம்பர் 7 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டாலும் பரீட்சைக்கு தயாராகுவதற்கான காலஅவகாசம் போதாமையைக் குறிப்பிட்டு, பல்வேறு தரப்புக்கள் பரீட்சையை பிற்போடுமாறு கோரியுள்ளன.
எனினும், செப்டம்பர் 7 ஆம் திகதி நடாத்த திட்டமிட்டுள்ள பரீட்சையை மாணவர்களுக்கு அநீதி நிகழாத வண்ணம் நடாத்துவதற்கு ஆவண செய்யுமாறு கல்வி அமைச்சர் உயர் அதிகாரிகளை வேண்டியுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் படி, ஜீலை 6 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கருத்துக்களை உள்ளவாங்கி, ஜீலை 6 ஆம் திகதியின் பின்னர் வரும் முதலாவது வார இறுதியில் பரீட்சை தொடர்பான உரிய அறிவித்தல் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.