பாடசாலை செல்லாது இருக்கும் சிறுவர் தொடர்பில் விசேட கணக்கெடுப்பு!

0

கொழும்பில் பாடசாலை செல்லாது இருக்கும் சிறுவர் தொடர்பில் விசேட கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட செயலகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

மட்டக்குளி, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் தற்போது, குறித்த கணக்கெடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கணக்கெடுப்பு முதல்முறையாக மேற்கொள்ளப்படும் நிலையில், அதற்காக அண்மையில் நியமனம் பெற்ற 2900 பட்டதாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கணக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாடசாலை செல்லாத சிறுவர் தொடர்பில் உரிய துறையினருக்கு அறிவிக்கப்படும் குறிப்பிடப்படுகின்றது.