பாடசாலை திறக்கும் திகதி அறிவிப்பு வெளியானது – மேல் மாகாணத்திற்கு அனுமதி மறுப்பு

0

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 23ஆம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

6ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்புக்களே, எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.