பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க அனுமதி!

0

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.