பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பசும்பாலிற்கு பதிலாக பாரம்பரிய முறையிலான அரிசிக் கஞ்சியினை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டில், போதுமான அளவு பால் உற்பத்தி இல்லாமையினாலும் அனைத்து மாணவர்களின் நன்மையினை கருதியும் இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.