பாண் விலையை குறைக்க இணக்கம்

0

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான ஒன்றிணைந்த தீர்வை வரிகள் நீக்கப்பட்ட நிலையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை 70 ரூபாய்க்கு வெதுப்பகங்களுக்கு வழங்கினால் பாண் இறாத்தலொன்றின் விலையை 10 ரூபாயால் குறைக்க முடியும் என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட வரி குறைப்பினை அடுத்து, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாயால் குறைக்கப்படும் என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.