பாண் விலை அதிகரிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

0

பாண் விலையினை அதிகரிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால் இதுகுறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண மற்றும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஆகியோருக்கிடையில் நேற்று(வியாழக்கிழமை) கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் நிறைவிலேயே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலையினை குறைப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்காத நிலையில், எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் பாண் விலையினை 10 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையினை 5 முதல் 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.