பாதாள குழுக்களைச் சேர்ந்த 25 பேர் வெளிநாடுகளில் வசித்து வருவதாக தகவல்!

0

பாதாள குழுக்களைச் சேர்ந்த 25 பேர் வெளிநாடுகளில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த 25 பேரில் 19 பேருக்கு, சர்வதேச சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.