பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன விஜயம்!

0

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் பலாலிக்கு வந்தடைந்த அவருடன் விமானப் படைத் தளபர் எயார் மார்சல் சுமங்கல டயஸூம் வருகை தந்துள்ளார்.

 பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தில் முப்படைகளின் கட்டளைத் தளபதிகள், வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.