பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் – கோட்டாவின் அதிரடி ஆரம்பம்

0

குடிவரவு குடியகல்வுத் திணைக்களமானது மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக குடிவரவு  குடியகல்வுத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட போதிலும், பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், சமல் ராஜபக்ஸ தலைமையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் காணப்பட்ட குடிவரவு குடியல்வுத் திணைக்களம் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.