பாரத பிரதமர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான கலந்துரையாடல் காலவரையின்றி ஒத்திவைப்பு

0

பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான கலந்துரையாடல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடுவதில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக இருந்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய இக்கட்டான நிலையில் எந்த நேரத்தில் விவாதம் நடைபெறுமா என்பது குறித்து தெளிவான முடிவு எட்டப்படவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இந்தக் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாரத பிரதமரால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஒன்லைன் கருவிகளைப் பயன்படுத்தியா அல்லது பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு எந்த விடயம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவது என்பது தொடர்பாகவும் இன்னும் இறுதி செய்யவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.