பாராளுமன்ற சபை அமர்வுகளை இன்று முதல் 23 வரை முன்னெடுக்க தீர்மானம்

0

பாராளுமன்ற சபை அமர்வுகளை இன்று (20) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19) நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனிடையே, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை இவ் வாரத்தின் வியாழன் (22) மற்றும் வெள்ளியன்று (23) சபை ஒத்திவைப்பு வேளை யோசனையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.