பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்த அறிவிப்பு வெளியானது!

0

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் 01ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக நாடளாவிய ரீதியிலுள்ள பாலர் பாடசாலைகள் அனைத்து மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.