பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை!

0

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 350 ரூபாயினால் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நுகர்வோர் விவகார அதிகார சபையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை 32 சதவீதத்தால் அதிகரித்துள்ளதால் தாம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை வருடாந்தம் 90 ஆயிரம் மெட்ரிக் தொன் பால்மாவினை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.