பிக்பாஸிடம் இருந்து ரம்யாவிற்கு அழைப்பு வந்ததா?

0

‘டம்மி டப்பாசு’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.

ராஜூமுருகனின் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து ‘ஆண் தேவதை’ எனும் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்

படங்களைத் தாண்டி, சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்தக் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டிலேயே குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வரும் ரம்யா பாண்டியன், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் ‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்ல உள்ளீர்களா’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், “தெரியவில்லை, இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

அப்படித் தொடர்பு கொண்டால் தானே போக முடியும்” என பதிலளித்துள்ளார்.

கடந்த பிக்பாஸ் சீசனின் போதே ரம்யா பாண்டியன் பங்கேற்க ஆர்வம் காட்டி இருந்தார்.

ஆகையால், பிக்பாஸ் 4-வது சீசனில் ரம்யா பாண்டியனும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.