பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!

0

பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்ற போதிலும் நாடு முற்றாக ஆபத்திலிருந்து விடுபடவில்லை என்பதால் பிசிஆர் பரிசோதனைகளை அதிகாரிகள் தொடரவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதை தவிர்ப்பதற்காக பிசிஆர் பரிசோதனைகளை தொடரவேண்டும் எனவும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதார நடவடிக்கைகளிற்காக மீளதிறக்கப்பட்டுள்ள போதிலும் சோதனைகளை தொடர்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தொற்று ஆபத்தினை கட்டுப்படுத்துவதற்கு தீவிரமான சோதனைகள் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.