பிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது

0

பாராளுமன்றம் கூடும் புதன்கிழமைகளில் கூடும்போது “பிரதமரிடம் ​கேளுங்கள்” கேள்வி நேரம் ஒதுக்கப்படும். ஆனால், இம்முறை பிரதமரிடம் கேள்விகளை கேட்க முடியாது.

எதிர்வரும் 10ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்படவுள்ளது.

ஆகையால், அன்றையதினம் பிரதமரிடம் கேளுங்கள் கேள்வி நேரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, 12ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் பாராளுமன்றம் இம்முறை கூடாது.