பிரதமரின் அழைப்பினை நிராகரிக்க சஜித் தரப்பு தீர்மானம்!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பினை நிராகரிப்பதற்கு சஜித் தரப்பு தீர்மானித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் எதிர்வரும் திங்கள் கிழமை கூட்டம் ஒன்றுக்கு வருகை தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் சஜித் பிரேதமாச தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டதையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் நேற்றிரவு இடம்பெற்றுள்ள குறித்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இறுதியில் பிரதமரால் கூட்டப்படும் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை எனவும், இதற்கான காரணங்களை விளக்கி விரிவான அறிக்கை ஒன்றை இன்று வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, ரஞ்சித் மத்தும பண்டார, குமார வெல்கம, கபீர் ஹாஸிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.