பிரதமர் தலைமையில் நாளை கட்சி தலைவர்களின் கூட்டம்

0

ஆளும் கட்சித்தலைவர்களின் கூட்டம் நாளை (19) முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

மாகாண சபை தேர்தல் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.