பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கினை நிர்மாணிக்கும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

0

ஹோமகமவில் பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கினை நிர்மாணிக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள், இன்னாள் அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு முன் கொரோனாவிற்கு பின்னரான புதிய சவால்களைக் கருத்தில் கொள்ள முடிவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.