பிரித்தானியாவில் கொவிட் தடுப்பூசிக்கான ஆய்வில் இலங்கை பெண்

0

கொவிட் தொற்று தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த ஆய்விற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பிரதம ஆய்வாளராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மஹேஷி என் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இலங்கையில் பிறந்த அவர், பிரித்தானியாவில் வைத்திய கல்வியை தொடர்ந்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கொவிட் தடுப்பூசிக்கான ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, இவர் அந்த குழுவில் இடம்பிடித்துள்ளார்.

மருத்துவ சஞ்சிகையான “The Lancet” சஞ்சிகையின் அறிக்கையிடலில், மஹேஷி என் ராமசாமியின் பெயர் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹேஷி என் ராமசாமிவின் தாய், கொழும்பு விஸாகா கல்லூரியின் பழைய மாணவன் என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

அவரது தந்தையான ரஞ்ஜன் ராமசாமியும், பிரசித்தி பெற்ற விஞ்ஞானியாவார்.

அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் அவர் பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.