பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

0

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton-இற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் (07) நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர்.

இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.