பிறந்த 46 நாட்களேயான சிசுவொன்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 8ம் திகதி 20 நாளான சிசுவொன்று இதே வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் நியூமோனியா காரணமாக இந்த சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது.
இந்த சிசுவின் உடல் இன்று மாலை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.