பிறப்புசான்றிதழ்களில் இனம் குறித்து குறிப்பிடுவதை நீக்கும் நடவடிக்கை- விமல் கடும் எதிர்ப்பு

0

புதிய பிறப்புசான்றிதழ்களில் இனம் குறித்து குறிப்பிடப்படுவதை நீக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் புதியபிறப்புச்சான்றிதழ்களில் இனத்தை குறிப்பிடாமல் இலங்கையர்கள் என மாத்திரம் குறிப்பிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

விண்ணப்பபடிவத்திலும் இனம் குறித்த கேள்விகள் நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய விமல்வீரவன்ச இதனை கடுமையாக எதிர்த்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இதற்கு ஒருபோதும் இடமளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.