பிலியந்தலை மற்றும் இரத்மலானையில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைப்பு

0

பிலியந்தலை மற்றும் இரத்மலானை பகுதிகளில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளமை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றினை ஜனாதிபதி செயலணிக்குழு முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மாத்தறை ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து மீன் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.