பிள்ளையானால் அபகரிக்கப்பட்ட சொத்து தொடர்பாக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0

மட்டக்களப்பு லேக் வீதியில் உள்ள அருண் தம்பிமுத்து என்பவருக்கு சொந்தமான பூர்வீக காணியும், வீடும் அருண் தம்பிமுத்துவுக்கு சொந்தமானது என மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்நிலையில், 128 வருடங்களுக்கு முற்பட்ட அவர்களின் பரம்பரை சொத்து. 1893ஆம் ஆண்டு அருண் தம்பிமுத்துவின் 6 வது தலைமுறைக்கு முற்பட்ட பரம்பரையினருக்குச் சொந்தமாக இருந்த காணியாகும்.

1990 ஆம் ஆண்டு கருணா தலைமையிலானவர்கள் அந்த வீட்டிலிருந்து கலா அக்காவையும், அருண் தம்பிமுத்துவையும் கடத்தி சென்றனர்.

பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டு கொழும்புக்குச் சென்ற பின்னர் சாம் தம்பிமுத்துவும், கலா தம்பிமுத்துவும் கொழும்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் அந்த வீடு பராமரிப்பின்றி சில காலம் கிடந்தது. பின்னர் 1992 ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் இராசிக்குழு அந்த வீட்டை ஆக்கிரமித்தது.

அக்குழு பின்னர் இராணுவ குழுவாகச் செயற்பட்டது. இராணுவத்தினருடன் செயற்பட்ட இராசிக்குழு செயலிழந்து போன பின்னர் 2005 ஆம் ஆண்டு பிள்ளையான் குழு அந்த வீட்டை ஆக்கிரமித்தது.

பிள்ளையான் அந்த வீட்டை ஆட்சி உறுதி எழுதினார். பின்னர் ஒருவருக்கு விற்பது போல உறுதி எழுதப்பட்டது. பின்னர் அந்த நபர் பிள்ளையானுக்கு விற்பதாக உறுதி எழுதப்பட்டது.

அந்த வீடு அருண் தம்பிமுத்துவுக்கு சொந்தமான பூர்வீக காணியும், வீடும் பிள்ளையான் அதை அருண் தம்பிமுத்துவிடம் ஒப்படைக்க வேண்டும். அது தான் நியாயம்.

தர்மமும், நீதியும் வெல்லட்டும். அடாவடித்தனங்களைச் செய்யும் ஆயுதக்குழுக்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.