பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0

பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பிலான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்து குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டீ. சூசைதாசன் உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கின் 1 முதல் 7 வரையான சாட்சியாளர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்கின் முதலாவது பிரதிவாதியான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தமையினால் கடந்த வழக்கு விசாரணை ஸ்கைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.