மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) கொவிட்-19 தடுப்பூசியை இன்று (புதன்கிழமை) செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகள் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) கலந்துகொண்டு தனக்கான தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.