பி.சி.ஆர் செய்ய வேண்டாம் என வலியுறுத்தும் குழு – வெளியான தகவல்

0

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஈடுபட வேண்டாம் என மக்களுக்கு கோரும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

நான்கு பேரை கொண்ட குழுவொன்று இணைய வழியாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத 796 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.