பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

0

பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த வாரம் சுமார் ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அண்மைய நில நாட்களாக ஐநூறுக்கும் குறைந்தளவான தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.