கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நாளாந்தம் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகள் குறைவடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொவிட் -19 தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளின்படி பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறியுள்ளார்.
“பி.சி.ஆர் பரிசோதனை குறைவுடன் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சிலர் வாதிடலாம். குறைந்தது அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம்.
நாளாந்தம் 15,000 பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும், அதில் கொஞ்சம் குறைவு இருப்பதாகத் தெரிகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.