பி.சி.ஆர் மருத்துவ ஆய்வக ஊழியருக்கு கொரோனா!

0

காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பி.சி.ஆர் மருத்துவ ஆய்வகத்தில் மாதிரி சோதனை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஏனைய 6 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக பி.சி.ஆர். சோதனை முடிவுகளைப் பெற சிறிது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கம்பாஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகளின் மாவட்ட பணிப்பாளர் டாக்டர் நலின் அரியரத்ன தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 5,000 பி.சி.ஆர். அறிக்கைகளை வெளியிடும் திறன் உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.