புதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது – வர்த்தமானி வெளியீடு

0

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையெழுத்துடன் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் உள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற அமர்வு மார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.