டென்மார்க்கில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா (B.1.428) என்ற வைரஸ் இந்நாட்டை சேர்ந்த மூவரிடம் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்தார்.
கொழும்பை சேர்ந்த மூவரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் மேற்படி புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.