புதிய வைரஸ் ஆபத்தை எதிர்கொள்வதற்காக நாட்டை முடக்குவது அவசியம்

0

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவது அவசியம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அல்லது ஆகக்குறைந்தது ஓரளவு முடக்கலையாவது நடைமுறைப்படுத்தாவிட்டால் எதிர்வரும் வாரங்களில் நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் மோசமடையலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் வேகமாக பரவவரும் வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நாடு பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பல தனியார் அரநிறுவனங்களிலும் தொழிலகங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ்பரவலை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாடு பாதிக்கப்படும் ஆபத்துள்ளது என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நாடு முக்கியமான தருணத்தில் உள்ளதுஎன தெரிவித்துள்ள உபுல்ரோகண புதுவைரஸ் எவ்வாறு செயற்படுகின்றது என்பது இன்னமும் உறுதியாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் 15 நாட்களில் இந்த வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது,இது கொரோனா வைரஸ் காலத்தில் மிகவும் தீர்க்ககரமான தருணம் என்பதை அதிகாரிகள் உணரவேண்டும் எனவும் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

புதியவைரஸ் தொடர்பில் விசேட நிபுணர்கள் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வரை நாட்டை ஒரளவாவது முடக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.