புதுநகர் அறநெறி மாணவர்களுக்கு ஸ்ரீநேசன் கற்றல் உபகரணம் வழகி வைப்பு.

0

மட்டக்களப்பிலுள்ள புதுநகர் அறநெறிக்கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த கல்வி நிலையத்துக்கு நேரடியாக விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நிலையத்தின் தேவைகள் பற்றி ஆராய்ந்ததுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் சிவ ஸ்ரீ சபாரெட்ணம் குருக்கள் , ஊர்ப்பிரமுகர்கள் , ஆசிரியைகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.