புதுவருட தினத்தில் அரச பணியாளர்கள் எடுக்கவுள்ள உறுதியுரை

0

2021 ஜனவரி முதலாம் திகதியன்று அரச பணியாளர்கள் தங்கள் பணிகளை ஆரம்பிக்கும்போது, அவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்வதாக உறுதியுரை செய்வதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையை செயற்படுத்தும் உறுதியுரையையும் செய்து கொள்ளவுள்ளனர்.

இது பொது சேவையின் உறுதியுரையில் ஒரு புதிய சேர்க்கையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது சேவைகள் அமைச்சு இது தொடர்பான சுற்றறிக்கைகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் ஒரு சிறிய நிகழ்வு நடத்தப்பட்டு அங்கு உறுதியுரை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு என்ற பார்வையின் கீழ் ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கும் மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதுடன், வளங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க அரச பணியாளர்கள் சத்தியம் செய்வார்கள் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த புதிய சேர்த்தல் ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பதவியேற்ற பின்னர் 2020 ஜனவரி முதலாம் ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அரச பணியாளர்களின் உறுதியுரையும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

2008 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி காலத்திலேயே அரச பணியாளர்கள் புதிய ஆண்டுக்கான உறுதியுரையை செய்துக்கொள்ளவேண்டும் என்ற நடைமுறை அமுலுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.