புத்தாண்டின் பின்னர் கடந்த 38 நாட்களில் மாத்திரம் 606 கோவிட் மரணங்கள்

0

கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரான 38 நாட்களில் நாட்டில் 606 கோவிட் மரணங்கள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 ஆம் திகதி மொத்த கோவிட் மரணங்கள் 604 ஆக காணப்பட்டதுடன் மே மாதம் 23 ஆம் திகதி முடிவடையும் போது மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது.

மே மாத ஆரம்பத்தில் நாட்டின் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 678 ஆக காணப்பட்டதுடன் மே மாதத்தில் கடந்த 23 நாட்களில் மாத்திரம் கோவிட் காரணமாக 523 பேர் மரணித்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.