புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

0

புனித ரமழான் மாதம் நாளை(சனிக்கிழமை) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

நாட்டில் எந்தவொரு பகுதியிலும் தலை பிறை தென்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை கூடிய பிறை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் எம்.தஸ்லிம் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.