புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்!

0

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ​நேற்று(செவ்வாய்கிழமை) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்தே குறித்த அறிவிப்பினை கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு வெளியிட்டுள்ளது.