புர்காவை தடைசெய்யும் சட்டத்தை உருவாக்கும் யோசனை அமைச்சரவைக்கு – நீதியமைச்சர் அலி சப்ரி!

0

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான இறுதி சடங்கை எப்படி நடத்த வேண்டும் என்பதை சுகாதார அதிகாரிகளே தீர்மானிக்க வேண்டும் என நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் பொது இடங்களில் முகத்தை மூடும் வகையில் புர்கா உட்பட முக கவசங்களை அணிவதை தடை செய்யும் சட்டத்தை உருவாக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோவிட் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான இறுதிச் சடங்குகளை நடத்துவது தொடர்பாக தன்னால் கருத்துக்களை முன்வைக்க முடியாது எனவும் அது சுகாதார அதிகாரிகளின் பொறுப்பு எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.