’புர்கா, மதராஸாக்களுக்கு விரைவில் தடை’

0

புர்கா, அரச கல்வி கொள்கையைப் பின்பற்றாத மதராஸாக்கள் விரைவில் தடை செய்யப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், 1-13 வரையிலான இஸ்லாமியப் பாடப் புத்தகங்களில் ஏனைய மதத்தினருக்கு எதிரானக் கருத்துகள் சூட்சமமான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும், தாக்குதலோடு தொடர்புடையவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.